
கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவை மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளது.
