கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மரந்தஹமுல்ல அரிசி வர்த்தக சங்கத்தின் தலைவர் பீ.கே. ரஞ்சித் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கீரி சம்பா அரிசி விற்பனையிலிருந்து விலகியுள்ளதால் இவ்வாறு இவ்விரு அரிசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களிலிருந்து இவ்வாண்டு ஏப்ரலில் இவ்வாறு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்தார்.

Share This