600 பேருந்துகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பொது போக்குவரத்தை மேம்படுத்த ரூபா 67,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 600 புதிய அரச பேருந்துகளுக்கு ரூபா 3,600 மில்லியன், தேய்ந்து போன 307 எஞ்சின் அலகுகளை மாற்ற ரூபா 2,062 மில்லியன் மற்றும் டிப்போ மேம்பாடுகளுக்கு ரூபா 790 மில்லியன் ஆகியவை அடங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது வரவு செலவுத் திட்ட உரையில் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை தொடருந்து சேவைக்கு ஐந்து புதிய டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMU) மற்றும் மின் டிக்கெட் உட்பட தொடர்ச்சியான டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ரூபா 3,300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கூடுதலாக, தனியார் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமப்புற போக்குவரத்து வழிகளை ஆதரிக்க ரூபா 2,000 மில்லியன் நிதி வழங்கப்படும். என்றும் ஜனாதிபதி கூறினார்.
