எரிபொருள் விலை திருத்தம் – இன்று பிற்பகல் விஷேட அறிவிப்பு வெளியாகும்

செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ், இன்றுஅறிவிக்கப்படும் நாட்டின் எரிபொருள் விலைகள் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூரா நெத்திகுமாரகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் சுமார் 10 வீத விலைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், விலைகள் கணிசமாக மாறவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு – பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையை குறித்த விலைத்திருத்தம் அடிப்படையாகக் கொண்டமையும் என கூறப்படுகிறது.
நாளை (செப்டம்பர் 1) திட்டமிடப்பட்டுள்ள மதிப்பாய்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விலைகள் நிலையானதாக இருப்பதால், உள்நாட்டு விலைகளும் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மயூரா நெத்திகுமாரகே சுட்டிக்காட்டினார்.