எரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

நேற்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92: ரூ. 5 குறைப்பு– ரூ. 299 இலிருந்து 294
சுப்பர் டீசல்: ரூ. 5 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 318
பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 335
ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 277
மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 180
இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

Share This