எரிபொருள் விலை குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாது

பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாத சூழலே உள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWA) தெரிவித்துள்ளது.
கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்குவதற்காக முறையான விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
பெற்றோல் விலை லிட்டருக்கு ரூ.10 மட்டுமே குறைந்துள்ளதால், கிலோமீட்டருக்கு 50 சத கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.