‘மனித சதையை உண்ணும் பழம்’ – அன்னாசி

பழங்கள், காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் என்பது அனைவுரும் அறிந்தது. அந்த வகையில் நாம் தினமும் சாப்பிடும் ஒரு பழத்துக்கு மனித சதையை உண்ணும் பழம் என்றொரு பெயரும் உண்டு.
அந்தப் பழம் வேறொன்றுமில்லை அன்னாசிப் பழம் தான். தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்தது.
விட்டமின்கள், தாதுக்கள், ஒட்சிசனேற்றிகள் அதிகம் உள்ள இப் பழம் பல நன்மைகளை வழங்கினாலும் இதிலுள்ள ப்ரோமெலைன் எனும் நொதி புரதத்தை உடைக்கும்.
எனவே இதனை உண்ணும்போது நாக்கிலுள்ள புரதங்களை உடைக்கிறது. இதனால் இலேசான கூச்ச உணர்வு ஏற்படுகிறது.