அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – துணை பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை முழுவதும் அண்மைய நாட்காக பதிவாகிவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இலங்கை முழுவதும் பொதுப் பாதுகாப்புக்கு எவ்வித பாதகமும் இல்லை.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வரும் நிலையில், அவை தேசிய பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. பொதுப் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.