கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ நேற்று (9) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

80.65 மீ நீளம் கொண்ட இந்த ஹைட்ரோகிராஃபிக் கப்பலை தளபதி பெர்தியோ டிமிட்ரி வழிநடத்துகிறார். இந்தக் கப்பலில் 58 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

வருகை தரும் குழுவினரும் அதன் தளபதியும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப் குறித்து கலந்துரையாட உள்ளனர். இலங்கை தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகத்தின் (SLNHO) மூத்த அதிகாரிகளையும்  தளபதி பெர்தியோ டிமிட்ரி தலைமையிலான குழு சந்திக்க உள்ளது.

கப்பல் மே 13 ஆம் திகதி மீண்டும் கொழும்பிலிருந்து புறப்படும்.

CATEGORIES
TAGS
Share This