லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் காலமானார்

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் பிரடெரிக் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். அவர் லக்சம்பர்க் இளவரசர் ரொபர்ட்டின் மகன் ஆவார். அத்துடன், லக்சம்பர்க் கிராண்ட் டியூக் ஹென்றியின் உறவினர்.
நீண்ட உடல்நலப் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த முதலாம் திகதி இளவரசர் பிரடெரிக் உயிரிழந்துள்ளார். அவர் POLG மைட்டோகாண்ட்ரியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
POLG நோய் என்பது உடலின் செல்களின் ஆற்றலைப் பறிக்கும் ஒரு அரிய மரபணு கோளாறு ஆகும். இது படிப்படியாக பல உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை மேலும் அதிகரிப்பதால் மூளை, கல்லீரல் போன்ற பல உறுப்புகள் செயலிழக்க நேரிடும்.
இந்நிலையில், இளவரசர் பிரெட்ரிக் மறைவுக்கு அரச குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ரொபர்ட் தனது மகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, POLG அறக்கட்டளைக்கு ஒரு நீண்ட, இதயப்பூர்வமான செய்தியை வெளியிட்டார்.
இது அவரது மகனால் நிறுவப்பட்ட வலைத்தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.