விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது

சுமார் 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது நான்கு இலங்கையர்கள் இன்று (06) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்த இந்த நபர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில் அதிகாலை 1:00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற 20 பொருட்களில் 378 மதுபான பாட்டில்கள் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காயை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் அந்த நபர்களை தடுத்து நிறுத்தி, சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.