மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டம் மேமலை பிரிவில் 23 வது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து, லயன் குடியிருப்பில் அமைந்துள்ள வீடொன்றை உடைத்துக் கொண்டு வந்ததில் நால்வர் காயமடைந்து கோட்டகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பிரிங்வெளி தோட்ட அதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த லயன் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஸ்பிரிங்வெளி மேமலை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்க வைக்கப்பட்டவர்களுக்கான இராபோசணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.