மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு

மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாக மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இலங்கையர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சைபர் குற்றவாளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.

Share This