
ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
குறித்த இராணுவ ஹெலிகொப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரின் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்து சம்பவித்த இடத்திலிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
