கட்டுநாயக்க வந்த நான்கு விமானங்கள் திரும்பி அனுப்பப்பட்டன
கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஓடுபாதை தெளிவாக தென்படாததால் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் இருந்து வந்த TK 730 விமானம் இந்திய திருவேந்திரம் விமான நிலையத்திலும் சீனா இந்தியா துபாயில் இருந்து வந்த விமானங்கள் UL- 226 UL- 750 UL- 174 மத்தள விமான நிலையத்திலும் தரை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், காலை 7 மணியளவில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள புகைமூட்டம் நீங்கி வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதுடன், திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் காலை ஒன்பது மணிக்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.