
வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது
கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பறெ்ற நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27 அன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறக்கப்பட்ட பின்னர் கண்டி நீதிமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கியபோது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்ற வளாகத்தின் பின்புறப் பகுதியிலிருந்து 1000 சிசி மற்றும் 600 சிசி திறண் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு தொடர்பாக கண்டி நீதிமன்ற பதிவாளரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கண்டி, கெட்டம்பே கிரிபத்கும்புர மற்றும் மாவனெல்ல பகுதிகளில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
