யாழ் மாவட்டத்தில் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது

யாழ் மாவட்டத்தில் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமற்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 12 சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )