பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் நால்வர்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில்  வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் பங்கேற்றுள்ள நிலையில் வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This