சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

 

Share This