துசித ஹல்லோலுவ கைது

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ, இன்று (19) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) துசித ஹல்லோலுவவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பகுதியில் ஹல்லோலுவ பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு செய்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, நடந்து வரும் விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.