முன்னாள் எம்.பி ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று வியாிக்கிழமை (02) காலமானார்.
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர், 2010-2015 காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார்.
ஜே.ஆர்.பி.சூரியப்பெரும முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.
இந்நிலையில், இறுதிச்சடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.