முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ வகை துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை, புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.