முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன இன்று (25) காலை காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 89 ஆகும்.
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.