முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்.

அவர் நேற்று இரவு (11) காலமானார், உயிரிழக்கும் போது அவருக்கு 98 வயதாகும்.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், 1993 வரை 17 ஆண்டுகள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அவர் களுத்துறை மாவட்ட உள்ளிட்ட தென்னை தொழில்கள் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (13) இரவு முதல் ஹேனேகம, பொகுனுவிட்டவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்படி, இறுதிக் கிரியை புதன்கிழமை (15) பொகுனுவிட்ட, ஹேனேகம, ஜனசெத பொது மயான பூமியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )