
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
