ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மீள இணையும் முன்னாள் உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மீள இணையும் முன்னாள் உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் மீள அக்கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 25 பேர் இவ்வாறு மீள கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்த உறுப்பினர்கள் மூன்று தடவை கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன், கலந்துரையாடல்களின்படி, மீள கட்சியில் இணைய தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு மீள கட்சியில் இணையவுள்ள குழுவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டிருந்தனர்.

இந்தக் குழு மீள கட்சியில் இணைந்ததன் பின்னர் மற்றுமொரு குழுவினர் மீள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This