முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.
இவர், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.