
எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் மண்டேல்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு தனது விருந்தினர்களை வரவேற்க தனியுரிமை வாய்ந்த விடுமுறை இல்லமொன்றை பரிந்துரைத்தமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் படி தெரியவந்துள்ளது.
விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமையுடைய இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையை விடுமுறைக்காக பயன்படுத்தலாம் என 2010 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் லோர்ட் மண்டேல்சன் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட ஆவணங்களிலிருந்தும், லார்ட் மண்டேல்சனின் மின்னஞ்சல் முகவரி தெரிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
‘விருந்தினர்கள்’ என்ற வார்த்தைக்கு மேற்கோள்குறிகள் பயன்படுத்தப்பட்டிந்ததால் அந்த விருந்தினர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது எப்ஸ்டீன் அங்கு தங்கியிருந்தாரா என்பதையும் ஆவணங்கள் உறுதிப்படுத்தவில்லை.
2019 ஆம் ஆண்டில்அவர் உயிரிழந்த பிறகு மட்டுமே எப்ஸ்டீனின் உண்மையான குற்றச்செயல்கள் லார்ட் மண்டேல்சனுக்கு தெரியவந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய மின்னஞ்சல் அவருக்கு நினைவில் இல்லை என்றும் பலவீனமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பற்ற நிலையில் பாதிக்கப்பட்டதில் வருந்துகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையான காலகட்டத்தில், லோர்ட் மண்டேல்சனுக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையிலான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.
இதில் எப்ஸ்டீன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எவ்வாறு கொண்டாடுவது, அமல்ஃபி கடற்கரை விடுமுறை போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில் இந்த பரிமாற்றங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கமான நட்பின் வெளிச்சத்தை காட்டுவதா ஆவணங்கள் கூறுகின்றன.
