அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது கட்டாய விடுப்பில் உள்ள தேசபந்து தென்னகோன் சாதாரண சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (19) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.