பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால விலை மனு கோரல்களை (Tenders) இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி விலை மனு கோரல்கள்களை செயற்படுத்தியுள்ளார்.

இதன்ஊடாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )