
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து டக்சியில் இருந்து விலகினார்.
எனினும், பின்னர் கட்சியில் இணைந்துகொண்ட அவர் 2011ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வியை சந்தித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொண்டர் உரிமைகள் மீட்பு கழகத்தில் இணைந்து பணியாற்றினார்.
எனினும், அவருக்கான செல்வாக்கு அங்கு குறைந்திருந்த நிலையில், அதிமுக தொண்டர் உரிமைகள் மீட்பு கழகத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையிலேயே கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயை சந்தித்த அவர் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
