ஜம்மு காஷ்மீரில் காட்டுத் தீ அபாயம்…பொதுக்களுக்கு எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் காட்டுத் தீ அபாயம்…பொதுக்களுக்கு எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்த வாரத்துக்குள் பாரிய காட்டுத் தீ அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காஷ்மீர் பிராந்தியத்துக்கு பொறுப்பான அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலுள்ள 10 மாவட்டங்களில் உள்ள மக்கள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையின் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் இக் காட்டுத் தீ பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பொது இடங்களில் நெருப்பு பற்ற வேண்டாம், ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கூறப்பட்டுள்ளதுடன், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் எந்நேரமும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This