வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொள்வதற்கு முன்னர், நாட்டிலுள்ள தூதர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள அறிஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, நாளை முதல் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திரிகளுக்குத் தெரிவிக்க அமைச்சர் தயாராகியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை மனித உரிமைகள் குறித்து முக்கிய அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை முன்வைக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.