விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு

விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதன்போது 75 கிலோ கிராம் நிறையுடைய ஏலக்காய் மற்றும் 673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் இந்த பொருட்களை விமான நிலையத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என விமான நிலைய சுங்க அதிகாரிகள்
சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This