
வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
63 வயதான பிஷப் செரா முலாலே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, 1,400 ஆண்டுகளில் கேன்டர்பரி பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் மன்னருக்கு முடிசூட்டுதல் போன்ற முக்கியமான கடமைகளைச் செய்யும் கேன்டர்பரி பேராயராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது.
கேன்டர்பரி பேராயர் உலகளாவிய ஆங்கிலிகன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
