ஓமானில் நடைபெறும் எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்

ஓமானில் நடைபெறும் எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக்கொள்ளவுள்ளார்.

ஓமானின் மஸ்கட்டில் எதிரிவரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் முதன்மையான ஆலோசனைகளை நடத்தும் மன்றமாகும்.

“கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளுக்கான பயணங்கள்” என்ற கருப்பொருளை எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதிலுமிருந்து 60 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இந்த மாநாடு ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு கொழும்பில் இரண்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டை இலங்கை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share This