சீனாவை புறட்டிப் போட்ட வெள்ளம் – 30க்கும் மேற்பட்வர்கள் பலி

சீனாவின் பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர், வடக்கு சீனாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வீதிகள் மற்றும் வீடுகளை அழித்துவிட்டன.
செங்டே நகரில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் எட்டு பேர் உயிரிழந்தனர்.
சீனா கடுமையான கோடைகாலத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் வரலாறு காணாத வெப்ப அலைகள் வீசின, அதே நேரத்தில் நாட்டின் தென்மேற்கில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சீனாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் பின்னணியில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் “முழுமையான” மீட்பு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் “மோசமான மற்றும் தீவிரமான சூழ்நிலைகளுக்கு” தயாராக இருக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதிகளான, மியுன் மற்றும் ஹுவைரூ பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளம் டஜன் கணக்கான வீதிகளை சேதப்படுத்தியுள்ளதுடன், 130க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சென்றடைய மீட்புப் பணியாளர்கள் மார்பளவு வெள்ளத்தில் தத்தளிப்பதையும் காணமுடிவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.