
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள அபாயமும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
களனி, களு, மஹவலி, ஜின், நில்வலா, வாலவே உள்ளிட்ட முக்கிய நதிக்கரைகள் வெள்ள அபாய எச்சரிக்கை மட்டத்தை கடந்துள்ளது. நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிரிவின் தகவலின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 21 மணிநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது.
மிக அதிக மழை மகுரு கங்கையில் 29.4 மில்லி மீற்றராகவும் மற்றும் ஜின் கங்கையின் (Gin Ganga) பத்தேகமையில் – 14.7 மில்லிமீற்றராகவும் பதிவாகியுள்ளது.
இதனால் எந்தவொரு ஆற்றை அண்மித்த பகுதிகளிலும் உடனடி வெள்ள அபாயத்தை உருவாக்கும் நிலை இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
