தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, 06ஆம் திகதி மாலை மஞ்ச திருவிழாவும், 11ஆம் திகதி காலை 09 மணிக்கு தேர் திருவிழாவும், மறுநாள் 12ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும், மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் பகல் வேளைகளில் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறவுள்ளது. அதற்காக பிடியரிசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு , அன்னதானத்திற்கு அரசி சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This