ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு – மேலும்12 பேர் காணாமற்போயுள்ளதாக தகவல்

ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு – மேலும்12 பேர் காணாமற்போயுள்ளதாக தகவல்

கண்டி மாவட்டத்திலுள்ள ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் மண்சரிவு காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கேகாலை புலத்கொஹுபிட்டிய தேதுகல பகுதியில் தொடர் குடியிருப்புகள் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.

சுமார் 5 வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ஜே.எம். ஹேரத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடுகளில் வசித்த மக்கள் காணாமற் போயுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்காக அந்தப் பகுதியை அடைவது
கடினமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )