மலேசியாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தும் ‘FitsAir’

இலங்கையின் முதல் தனியார் உரிமையாளருக்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனமான ஃபிட்ஸ்ஏர் (FitsAir), மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
65,000 ரூபா கட்டணத்தில் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூருக்கான விமானங்கள் 2025 ஏப்ரல் 4, அன்று தொடங்குவதுடன், வாராந்திர நான்கு விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படும்.
ஃபிட்ஸ்ஏர் கோலாலம்பூருக்கு சென்றுவர டிக்கெட்டுக்கான ஆரம்பகட்டணமாக ரூ. 65,300 என்ற சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
20 கிலோ சரிபார்க்கப்பட்ட பொருடகள் பொதி மற்றும் 7 கிலோ பொதியை பயணிகள் கையில் கொண்டு செல்ல முடியும்.
கோலாலம்பூருக்கு விமானங்களைத் தொடங்குவது தனது வலையமைப்பை விரிவுபடுத்தி பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறதாக ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் மாலைத்தீவு, துபாய், டாக்கா மற்றும் சென்னைக்கு ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.