30 ஆண்டுகளில் முதல் புகைப்படம்….ஆனந்தத்தில் உன்னி கிருஷ்ணன்

30 ஆண்டுகளில் முதல் புகைப்படம்….ஆனந்தத்தில் உன்னி கிருஷ்ணன்

1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் வெளிவந்த “என்னவளே அடி என்னவளே…” பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

இதுதான் அவரது முதல் பாடலும் கூட.

இப் பாடல் இன்று வரையில் அனைவரினதும் விருப்பப் பட்டியலில் இருப்பதுடன் பிரபுதேவாவுக்கும் பெருமையைத் தேடித் தந்தது.

இந்நிலையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் நடிகர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு,

“நீங்கள் நம்புவீர்களா எனத் தெரியவில்லை. என் முதல் பாடலான என்னவளே பாடலை பிரபுதேவாவின் படத்தில்தான் பாடினேன்.

ஆனால், இந்த 30 ஆண்டுகளில் நான் அவருடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

Share This