நாளை வெளிவரும் கவினின் ‘மாஸ்க்’ பட ஃபர்ஸ்ட் லுக்

விக்ரனன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார்.
இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப் படத்தில் ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிப்பதோடு, ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் நாளை காலை 10.30 இற்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.