கொட்டகலை, ஆகீல் தோட்டத்தில் தீ பரவல்

கொட்டகலை, ஆகீல் தோட்டத்தில் தீ பரவல்

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

அருகில் இருந்த மேலும் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

CATEGORIES
Share This