சதொச நிறுவனத்தில் தீ பரவல் – உணவுப்பொருட்கள் அனைத்தும் தீக்கிறை
பண்டாரவளை நகரில் உள்ள சதொச நிறுவனத்தில் இன்று (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் குறித்த சதொச நிறுவனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் குறித்த தீவித்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை நகர சபை மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தி, ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பண்டாரவளை பொலிஸாரும் இணைந்து தீ சுற்றுவட்டார பகுதிகளுக்கு பரவாமல் தடுத்து தண்ணீர் பவுசர்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
தீயினால் சதொச நிறுவன களஞ்சியசாலையில் இருந்த அரிசி, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட இழப்பு இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.