
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிதியை வழங்க கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி முன்வந்துள்ளது.
கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் இந்தப் பங்களிப்புடன் சேர்த்து, கொரிய குடியரசினால் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த மனிதாபிமான உதவியின் அளவு 550,000ம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
