கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

இந்தியாவின் உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது.

அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம். மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து மணமகன் வீட்​டார், மணமகள் வீட்​டாருடன் சண்டை போட்​டனர். ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் கைகலப்பில் ஈடு​பட்டு திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்​கப்​பட்​டனர்.

பொலிஸார் தலை​யீட்​டின் பின்​னர் திரு​மணம் இனிதே நடந்து முடிந்​தது. திருமண வீட்​டில் நடந்த சண்​டை​யில் 15 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

Share This