தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நடவடிக்கையாக தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 55,000 மெற்றிக் தொன் உரத்தில் மொத்தமாக 27,500 மெற்றிக் தொன் தென்னைச் செய்கைக்காக ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
எங்கள் அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புள்ள தென்னந்தோப்புகளுக்கு ஐந்து வருடங்களாக உரமிடப்படவில்லை, இதன் விளைவாக அறுவடை குறைந்துள்ளது. பொதுமக்களும் உரம் இட முடியாமல் தவித்தனர். சமீபத்தில் உரம் ஏற்றுமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பாதியை தென்னை சாகுபடிக்கு ஒதுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தோம்.
இம்முயற்சி எதிர்வரும் வருடத்திற்குள் நெருக்கடியை தீர்க்க உதவும் என பிரதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.