இதுவரையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்காத விவசாயிகள்
![இதுவரையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்காத விவசாயிகள் இதுவரையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்காத விவசாயிகள்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/06-2-1.jpg)
விவசாயிகள் எவரும் இதுவரையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்லந்த தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் அறுவடையை ஆரம்பிக்காத காரணத்தினால் இவ்வாறு களஞ்சியசாலைகளுக்கு நெல் தொகை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த பிரதேசங்களில் விவசாயிகள் அறுவடையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நெல் கொள்வனவுக்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் சுமார் 80 களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரிசி கையிருப்புகளை பராமரிப்பதற்காக நெல்லை சேகரிப்பதில் தற்போது அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் செனவிரத்ன தெரிவித்தார்.