வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்
திருகோணமலை – முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட 150 ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வேளாண்மை அறுவடை இடம்பெறும் நேரத்தில் கடும் மழை ஏற்பட்டதால் தமது வேளாண்மை நீரில் மூழ்கிக் காணப்படுவதால் அறுவடை செய்ய முடியாது உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன் பட்டு வேளாண்மை செய்கை மேற்கொண்ட போதிலும் தமது வேளாண்மை மழையினால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.